< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
|27 July 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் பதவி விலக கோரியும், மணிப்பூர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய மாநில அரசை டிஸ்மி செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பி.சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.