தூத்துக்குடி
தூத்துக்குடியில்விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
|தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மீன்பிடி தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
நேற்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இன்றும் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தம் தொடரும் என்று கூறப்படுகிறது.