< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இளைஞர் அணி பொறுப்புகளுக்கு மனு கொடுக்கலாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இளைஞர் அணி பொறுப்புகளுக்கு மனு கொடுக்கலாம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இளைஞர் அணி பொறுப்புகளுக்கு மனு கொடுக்கலாம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றிய கழகங்கள், 2 நகர கழகங்கள், 2 பகுதிக் கழகங்கள் மற்றும் 12 பேரூர் கழக அமைப்புகளுக்கான இளைஞர் அணி அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி வழங்க வேண்டும். இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தி.மு.க. இளைஞர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் நகல் இணைத்து வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்டக் கழக அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்