< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்திய வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கத்திக்குத்து

தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியபுரம் மேல வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பிரவீன் குமார் (வயது 21). இவருக்கும், தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த சாமுவேல் என்ற மாடசாமி மகன் மதன்குமார் என்ற அப்லு (25), பார்த்திஸ் மகன் செல்வம் (26) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மீன்பதப்படுத்தும் கம்பெனி அருகே பிரவீன்குமார் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த, மதன்குமார், செல்வம் ஆகிய 2 பேரும், பிரவீன்குமாரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

கைது

இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து, மதன்குமார், செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட மதன்குமார் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்குகளும், செல்வம் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்