< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில்சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
17 Aug 2023 12:15 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

ஆழ்வார்திருநகரி

ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு யூனியன் தலைவர் ஜனகர் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, கிறிஸ்டோபர்தாசன், கவுன்சிலர் தானிராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் யூனியன் தலைவர் ஜனகர் தேசியக்கொடி ஏற்றினார். வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண்மை அலுவலர்கள் தங்க மாரியப்பன், கண்ணன், தொழில் நுட்ப அலுவலர்கள் ஜேசுதாஸன், சசூசைமாணிக்கம், தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வல்லநாடு-சாத்தான்குளம்

* வல்லநாடு துளசி கல்வி குழுமத்தின் சார்பில் நடந்த விழாவுக்கு இயக்குனர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். அறிவு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரி முதல்வர் மீரா முகைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் அறிவழகன் வரவேற்றார். கணினி துறை பேராசிரியை இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரிசி தேசியக்கொடி ஏற்றினார். குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி டென்னிசன், செயலாளர் பவுன்ராஜ், மூத்த வழக்கறிஞர்கள் இளங்கோ, சுசில்குமார், சாமுவேல், ரமேஷ் அந்தோணி, ரமேஷ் குமார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஏரல்- திருச்சசெந்தூர்

ஏரல் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி சர்மிளாதேவி மணிவண்ணன் தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ஜான் ரத்தனபாண்டி, சுகாதார மேற்பார்வைளர் அடைக்கலம், ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணிவண்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் சிறுத்தொண்டநல்லூர் கிளை தலைவர் லட்சுமணன் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. உமரிக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் ராஜேஷ்குமார் தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் பாஸ்கர், மக்கள் நல பணியாளர் விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் ஏரல் சேகர தலைவர் கிங்ஸ்லி தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி நிறுவனர் முருகன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏரல் முஸ்லிம் வணிகர் சங்க தலைவர் பாக்கஅலி, ஒன்றிய கவுன்சிலர் பாரத் மற்றும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தேசிய கொடியை ஏற்றினார். நிலைய அலுவலர் (போக்குவரத்து) மோகன், சிறப்பு நிலைய அலுவலர் மோகன் முன்னணி தீயணைப்போர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வீரபாண்டியன்பட்டனம் புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் முதல்வர் அருட்சகோதரி பெர்னதத் தேசிய கொடியேற்றினார்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் ராஜாமணி தலைமையிலும், திருச்செந்தூர் வட்டார தலைவர் சண்முகம் ராமச்சந்திரன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி துணைச் செயலாளர் கார்த்திக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்க துணை தலைவர் ராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாகுபுரம் பள்ளி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளியின் டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். நந்தினி சீனிவாசன், துணை முதல்வர் சுப்புரத்தினா, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசிர், பள்ளி நிர்வாகி மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அனுராதா தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் ஏற்றனர். தொழிற்சாலை பொது மேலாளர் ராமச்சந்திரன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். முன்னதாக மாணவி அபிநயா வரவேற்றார். மாணவர் குஷ்விந்த் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் உஷா கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்