< Back
மாநில செய்திகள்
டி.என்.பாளையத்தில்கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
ஈரோடு
மாநில செய்திகள்

டி.என்.பாளையத்தில்கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
13 Feb 2023 6:44 AM IST

டி.என்.பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவருக்கு அப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு சக்திவேல் கரும்பு பயிரிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தோட்டம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கரும்பு தோகை நன்கு காய்ந்திருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

புகை பிடித்தனர்

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தண்ணீரை ஊற்றி தோட்டத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தோட்டத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதி பகுதியில் மது அருந்தும் சிலர் புகை பிடித்துவிட்டு் அணைக்காமல் தோட்டத்தில் போட்டுச்சென்றதே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்