< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

தினத்தந்தி
|
8 April 2023 12:15 AM IST

திருவாரூரில், கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூரில், கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தவக்காலம்

ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது.

கடந்த 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. புனித வியாழனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

புனித வெள்ளி

புனித வெள்ளியையொட்டி நேற்று திருவாரூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலய வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதை முன்னிட்டு திருச்சிலுவை பவனி நடந்தது.

ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த பவனி வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. முன்னதாக திருச்சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சியும்,. கல்லறையில் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியும்நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

ஏசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

மேலும் செய்திகள்