< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
12 July 2023 1:00 AM IST

திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கேசவராஜ், மாவட்ட பொருளாளர் தவபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்