< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், ஆடிப்பாடி-கும்மியடித்து அசத்திய தலைமை ஆசிரியை
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், ஆடிப்பாடி-கும்மியடித்து அசத்திய தலைமை ஆசிரியை

தினத்தந்தி
|
16 Oct 2022 6:45 PM GMT

திருவாரூரில், பாட புத்தகத்தில் உள்ள பாடலுக்கு ஏற்றவாறு ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை ஒருவர் அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூரில், பாட புத்தகத்தில் உள்ள பாடலுக்கு ஏற்றவாறு ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை ஒருவர் அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

எண்ணும், எழுத்தும் இயக்கம்

காலாண்டு விடுமுறையின்போது தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கிற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.அந்தவகையில் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 200-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஆடிப்பாடி அசத்தல்

இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்துள்ள மெய்ப்பொருள் அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பாகற்காய் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி-கும்மியடித்து சக ஆசிரியர்களின் முன்பு சிறு குழந்தை பாடுவது போல் பாடி அசத்தினார்.இதனை கண்ட ஆசிரியர்கள் அதனை தங்களது ெசல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த பாகற்காய் பாடலில், மாமா திங்கிற பாகற்காய் என்று வரும் வரிகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

ஊக்கப்படுத்தும் விதத்தில்...

இதுகுறித்து தலைமை ஆசிரியை சுமதியிடம் கேட்டபோது, நான் எனது பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதுபோன்று ஆடிப்பாடி அவர்களின் மனதில் அந்த பாடலை பதிய வைத்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும் செய்திகள்