< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொரட்டூரில் 84 மி.மீ. மழை பெய்தது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொரட்டூரில் 84 மி.மீ. மழை பெய்தது

தினத்தந்தி
|
20 Jun 2023 3:31 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கொரட்டூரில் 84 மி.மீ. மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:- அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 84 மி.மீ. மழையும், பூந்தமல்லியில் 74 மி.மீ. மழையும், சோழவரத்தில் 16 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அதேபோல் ஆவடியில் 28 மி.மீ., செங்குன்றத்தில் 25 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 16 மி.மீ., சோழவரத்தில் 16 மி.மீ., திருவள்ளூரில் 15 மி.மீ., பொன்னேரியில் 13 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 9 மி.மீ., திருவாலங்காட்டில் 6 மி.மீ., ஆர்.கே.பேட்டையில் 5 மி.மீ., கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, திருத்தணி, பொன்னேரி ஆகிய பகுதியில் தலா 3 மி.மீ. என மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 303 மி.மீ. மழையும், சராசரியாக 20.20 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் விடுமுறை விடப்பட்டது. இதைபோல நேற்று கடம்பத்தூர், கசவநல்லத்தூர், பிரயாங்குப்பம், திருப்பாச்சூர், அகரம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர் நகர், சத்தரை, பேரம்பாக்கம், களாம்பாக்கம், சிற்றம்பாக்கம், இருளஞ்சேரி, நரசிங்கபுரம், மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர், வயலூர், உளுந்தை போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மேலும் செய்திகள்