< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கடைகளில்75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கடைகளில்75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

திருச்செந்தூர் கடைகளில் 75 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று கடைகளில் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் சுமார் 75 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்