< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி போலீஸ் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி போலீஸ் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

தூத்துக்குடி போலீஸ் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த போலீசார் மற்றும் அமைச்சுபணி அலுவலர்கள் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசுக்கு போலீஸ் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 11.10.2019 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரனின் மகன் மார்த்தாண்ட பூபதி என்பவருக்கு அலுவலக உதவியாளர் பதவியில் தமிழக அரசு பணி நியமனம் செய்து உள்ளது. இந்த பணி நியமன ஆணையை மார்த்தாண்டபூபதியிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வழங்கினார். அப்போது, மாவட்ட போலீஸ் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன். உதவியாளர் சங்கரவேணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்