< Back
மாநில செய்திகள்
போட்டி தேர்வு மாணவர்களுக்காக தூத்துக்குடியில்அம்மா உணவகத்தை இரவிலும் திறக்க
தூத்துக்குடி
மாநில செய்திகள்

போட்டி தேர்வு மாணவர்களுக்காக தூத்துக்குடியில்அம்மா உணவகத்தை இரவிலும் திறக்க

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

போட்டி தேர்வு மாணவர்களுக்காக தூத்துக்குடியில் அம்மா உணவகத்தை இரவிலும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் நாராயணராஜ், மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மேற்கு மண்டல தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தை இரவு நேரமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் மாணவர்களின் கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

மேலும் செய்திகள்