< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை
|16 July 2023 6:48 PM IST
திருவொற்றியூரில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
திருவொற்றியூர் நாடார் உறவின்முறை சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவொற்றியூர் நாடார் உறவின் முறை திருமண மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்துச்செல்ல தொடர்ந்து சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே உள்ள காமராஜர் சிலை மற்றும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.
இதில் நாடார் உறவின்முறை தலைவர் மதுரை வீரன், செயலாளர் எம்.காமாட்சி, பொருளாளர் ராமகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர்கள், வே.ராமசாமி, ஆர்.சி.ஆசைத்தம்பி, எஸ்.பி.சேகர், சட்ட ஆலோசகர் தொண்டன் சுப்பிரமணி, சோலையப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.