திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான முகாம் 8-ந்தேதி நடக்கிறது
|திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான முகாம் 8-ந்தேதி நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது, அதன்படி வருகின்ற 8-ந்தேதி திருவள்ளூர் வட்டத்தில் ஸ்ரீதேவி குப்பம் நியாய விலை கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டத்தில் வடதில்லை நியாயவிலை கடை அருகில், பூந்தமல்லி வட்டத்தில் சமத்துவபுரம் நியாய விலை கடையில் அருகில், திருத்தணி வட்டத்தில் கார்த்திகேயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பள்ளிப்பட்டு வட்டத்தில் கொத்தூர் நியாய விலை கடை அருகில், பொன்னேரி வட்டத்தில் திருப்பாலைவனம் -1 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அப்பாவரம் நியாய விலை கடை அருகிலும், ஆவடி வட்டத்தில் நெமிலிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், ஆர்.கே. பேட்டை வட்டத்தில் பத்மாபுரம் நியாயவிலை கடை அருகில் ஆகிய 9 கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.