< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்த ரவுடி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்த ரவுடி

தினத்தந்தி
|
20 July 2022 2:08 PM IST

திருவள்ளூரில் மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்த ரவுடியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான ஜே.என்.சாலை தாசில்தார் அலுவலகம் எதிரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு மேலே 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அந்த வீட்டுகளுக்கு ஒரு மர்ம நபர் மதுபோதையில் புகுந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் வீட்டிலிருந்து அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர்.

இந்த சத்தத்தை கேட்ட ஓட்டலுக்கு வந்தவர்கள் மற்றும் எதிரே பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் புகுந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் கைது செய்தனர். அவர் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 38) என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்