கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
|திருக்கோவிலூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, திருக்கோவிலூர் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கீதா வரவேற்றார்.
கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. இ்தில் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் டி.குணா, நகராட்சி கவுன்சிலர்கள் கந்தன்பாபு, சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ராஜா, குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் சந்தோஷ்குமார், பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தொழிலாளர் துணை ஆய்வாளர் சண்முகசுந்தரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வளர்மதி, தலைமை ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, சஞ்சீவி மற்றும் கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.