< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; தொழிலாளி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; தொழிலாளி பலி

தினத்தந்தி
|
31 Aug 2023 8:02 AM IST

திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டு மங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் நேற்று காலை திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் காய்கறி வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது குமார் கல்பாக்கம் சாலையில் இருந்து மேட்டு மங்கலம் பகுதியில் உள்ள தனது விட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கல்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் குமாரை 20 அடி தூரத்திற்கு பஸ் இழுத்து சென்றது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சின் அடியில் இருந்த குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்