< Back
மாநில செய்திகள்
திருசெந்தூரில் கார் தீப்பிடித்து எரிந்தது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருசெந்தூரில் கார் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
1 Sept 2023 12:15 AM IST

திருசெந்தூரில் கார் தீப்பிடித்து எரிந்தது

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தேரிக்குடிப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் தேங்காய் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் டாஸ்மார்க் அருகே சாலையோரத்தில் அவரது காரை நிறுத்திவிட்டு ஓட்டலில் டிபன் வாங்க சென்றார். அப்போது காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. சிறிது நேரித்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்