< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தெர்மல்நகர் பகுதியில்திடீர் தீவிபத்து
|1 Aug 2023 12:15 AM IST
தெர்மல்நகர் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள தெர்மல்நகர் கேம்ப் -1 குடியிருப்பு பகுதியின் எதிர்ப்புறம் நேற்று மாலை 3½ மணியளவில், சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி போடப்பட்ட முள்செடிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தெர்மல் நகர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று முள்செடிகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அரை மணிநேரம் போராடி அணைத்தனர். இதனால், அருகிலுள்ள குடிசை வீடுகளுக்கு தீ பரவவிடாமல் தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.