< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்மாமன்னன் திரைப்படத்தை திரையிட கூடாது:நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில்மாமன்னன் திரைப்படத்தை திரையிட கூடாது:நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படத்தை திரையிட கூடாது என்று நேதாஜி பாா்வர்டு பிளாக் கட்சியினர் மனு கொடுத்தனர்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத்பாசில் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் பிரபுதேவர் தலைமையில் நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் அவர்கள் கொடுத்த மனுவில், 'தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் மாமன்னன் திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் இரு சமுதாயத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயக்குனர் மாரி செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் மாமன்னன் திரைப்படத்தை திரையிடுவதை தடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்