< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்  வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

தினத்தந்தி
|
12 Aug 2022 8:04 PM IST

தேனி மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் நடக்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் நாளை மறுநாள் கட்டாயம் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மது விற்பனை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. விதிமீறல் எதுவும் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்