< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள மதுபான பார்களை அகற்ற வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம்
|15 Sept 2022 9:58 PM IST
தேனி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள மதுபான பார்களை அகற்ற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தேனி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் அதிக உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள அரசு மதுபான பார்கள், தனியார் மனமகிழ் மன்றங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.