< Back
மாநில செய்திகள்
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 Jun 2022 7:45 PM IST

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் இயங்கிவருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக லிமிடெட் மற்றும் தனியார் நிறுவனமும் இணைந்து திரவ எரிவாயு முனையம் துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் எரிவாயுவை இந்த முனையத்தில் சேமித்து மற்ற இடங்களுக்கு லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் பல்வேறு இடங்களில் அனுப்பப்படுகிறது. இதில் 60 தொழிலாளர்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். ஆபத்து நிறைந்த இந்த பணியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது குறைந்தபட்ச கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்