< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தே.சிந்தலைச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
|12 Sept 2022 8:03 PM IST
தே.சிந்தலைச்சேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உத்தமபாளையம் தாலுகா தே.மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட தே.சிந்தலைச்சேரி கிராமத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.