< Back
மாநில செய்திகள்
போடியில்  ஜவுளி கடைக்குள் புகுந்த பாம்பு
தேனி
மாநில செய்திகள்

போடியில் ஜவுளி கடைக்குள் புகுந்த பாம்பு

தினத்தந்தி
|
27 Nov 2022 12:15 AM IST

போடியில் ஜவுளி கடைக்குள் பாம்பு புகுந்தது.

போடியில் பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் ஜவுளி கடை ஒன்று உள்ளது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் கடையை திறந்தனர். அப்போது கடைக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அவர்கள் அதிா்ச்சி அடைந்தனர். இதையடுத்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி கடைக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 7 அடி நீள சாரைப்பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதிக்குள் விட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்