< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில்  பிரதோஷ சிறப்பு வழிபாடு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
8 Sept 2022 11:05 PM IST

பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது

பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் நந்தீஸ்வரர், மகாலட்சுமி, அகத்திய முனிவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல் பிரதோஷத்தையொட்டி போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்