< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில்ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில்ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
7 Jan 2023 12:15 AM IST

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். நிதித்துறை அரசு கூடுதல் செயலாளரும், ஓய்வூதிய இயக்க இயக்குனருமான ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் பேசும்போது, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலவினத் தொகையை திரும்பப் பெறுதல், கொரோனா மருத்துவ செலவினங்களுக்கான தொகையை திரும்ப கோருதல், ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிக்கொடை, நிலுவைத்தொகை, ஓய்வூதிய பணப்பலன்கள், தொடர் குடும்ப ஓய்வூதிய பலன்களை பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் மீது விவாதிக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கருவூல அலுவலர் லிங்கேஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமதுஅலி ஜின்னா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்