ஈரோடு
அந்தியூர் பகுதி ஏரி-குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்க கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
|அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி-குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை தங்களுக்கே வழங்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி-குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை தங்களுக்கே வழங்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் பெஸ்தவர் மீனவர் சங்கத்தின் சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நடராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மீன்வளத்துறை என தனியாக இருக்கும்போது அதை மீறி அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தன்னிச்சையாக பொது ஏலம் விடும் நீர்வளத்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரிசல்-வலை
மேலும் சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவுக்கு மாறாக ஈரோடு மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்டுள்ள பொது ஏல நடைமுறை குழுவை உடனடியாக கலைக்க கோரியும், அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவர்களுக்கே வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர்கள் பரிசல், மீன்பிடிக்கும் வலைகளையும் வைத்திருந்தார்கள்.