காஞ்சிபுரம்
எறையூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எம்.பி. டி.ஆர்.பாலு பங்கேற்பு
|எறையூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
எம்.பி. டி.ஆர்.பாலு
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எறையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் கிராம சபை தொடக்க உரையினை பார்வையிட்டனர். இதில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிரேகா சரவணன், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்றத்தூர் ஒன்றியத்தில்
இதேபோல் வெங்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வல்லம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா தேவி தர்மா தலைமையில் கிராம சபை நடைபெற்றது. பண்ருட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
வல்லக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை தசரதன் தலைமையில் நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி ஏசுபாதம், பரணிபுத்துர் ஊராட்சி மன்ற தலைவர் கவுரிதாமோதரன், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன், சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், நந்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சசிமுத்துராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.