< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில்  போலீஸ் பணிக்கான தேர்வை 8,963 பேர் எழுதினர்
தேனி
மாநில செய்திகள்

மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தேர்வை 8,963 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
28 Nov 2022 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தோ்வை 8 ஆயிரத்து 963 போ் எழுதினர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் 13 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வை எழுத 9,432 ஆண்கள், 1,300 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 10 ஆயிரத்து 733 பேர் அனுமதி பெற்றிருந்தனர்.

தேர்வு மையங்களுக்கு காலை 7 மணியில் இருந்து தேர்வர்கள் வரத் தொடங்கினர். போலீசார் பரிசோதனை செய்த பின்பு அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 7,916 ஆண்கள், 1,047 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,963 பேர் தேர்வு எழுதினர். 254 பெண்கள் உள்பட 1,770 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை தேனி மாவட்டத்துக்கான தேர்வு சிறப்பு பார்வையாளரான திருப்பூர் டி.ஐ.ஜி. அபினவ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைமுறைகள் வீடியோ கேமராவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்