< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கடலூர் முதுநகரில் பிளஸ்-2 மாணவி கடத்தல் போலீசார் விசாரணை
|4 Sept 2022 8:51 PM IST
கடலூர் முதுநகரில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர் முதுநகர் சராங்கு தெருவை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் பெற்றோருடன் தூங்கிய மாணவியை, காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. இதனால் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை.
பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மாணவியை, சிதம்பரம் குமாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய், தனது மகளை கடத்தி சென்ற சந்தோஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்தியதாக கூறப்படும் சந்தோஷ்குமாரையும் தேடி வருகின்றனர்.