விருதுநகர்
போதை மாத்திரை விற்ற வழக்கில் பல் டாக்டர் அதிரடி கைது
|போதை மாத்திரை விற்ற வழக்கில் பல் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி பகுதியில் 100 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த யோகராஜ் (வயது 43) என்பவரையும், ஸ்ரீவில்லிபுத்தூர் குறுக்கன்குளம் சத்யா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவரையும் ஆமத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாட்டக்குளத்தை சேர்ந்த பல் டாக்டர் வெங்கடேஸ்வரன் (32) என்பவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரத்தில் பல் ஆஸ்பத்திரியும், மருந்து விற்பனை கடையும் வைத்துள்ளதும், அவரது கடையில் இருந்துதான் போதை மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பல் டாக்டர் வெங்கடேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது கடையிலிருந்து 75 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது பல் ஆஸ்பத்திரிக்கும், மருந்து விற்பனை கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.