கரூர்
சிறுமி பாலியல் வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|சிறுமி பாலியல் வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கரூர் அருகே உள்ள வீரராக்கியம், சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32), தொழிற்பேட்டை அசோக் கம்பெனி வீதியை சேர்ந்தவர் மதன் (32), வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர்கள் 3 பேரும் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சிறுமியின் பாலியல் வழக்கு தொடர்பாக கரூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை திருச்சி சிறையில் உள்ள சதீஷ், மதன், சுரேஷ் ஆகியோரிடம் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர். இதையடுத்து 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.