< Back
மாநில செய்திகள்
விவசாயியை தாக்கிய வழக்கில்  தந்தை, மகனுக்கு சிறை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விவசாயியை தாக்கிய வழக்கில் தந்தை, மகனுக்கு சிறை

தினத்தந்தி
|
21 July 2022 8:18 PM GMT

விவசாயியை தாக்கிய வழக்கில் தந்தை, மகனுக்கு சிறை

அழகியபாண்டியபுரம்,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (70). இவருடைய மகன் பிரபு (35).

ஊர் பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ராமஜெயம் தன்னுடைய மகன் பிரபுவுடன் சேர்ந்து சேகரை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரகமலேஷ் மார்த்தாண்டம் தீர்ப்பு கூறினார். அதில், ராமஜெயத்துக்கு ஒரு வருட சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும், மகன் பிரபுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.500-ம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீலாக யாசின் முபாரக் அலி ஆஜரானார்.

மேலும் செய்திகள்