ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில்லாரி கவிழ்ந்து விபத்துடிரைவர் உயிர் தப்பினார்
|பர்கூர் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.
அந்தியூர்
நாமக்கல்லில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு சோப்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று பர்கூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். தட்டக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்காக, வழிவிட்டபோது குமார் ஓட்டிச்சென்று லாரி எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிரைவர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.