< Back
மாநில செய்திகள்
பர்கூர் மலைப்பகுதியில்லாரி கவிழ்ந்து விபத்து;டிரைவர் உயிர் தப்பினார்
ஈரோடு
மாநில செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில்லாரி கவிழ்ந்து விபத்து;டிரைவர் உயிர் தப்பினார்

தினத்தந்தி
|
28 Feb 2023 3:11 AM IST

பர்கூர் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

அந்தியூர்

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி தட்ட கரை மூங்கில் மடுவு பகுதியில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை மைசூரை சேர்ந்த குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார்.

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் உள்ள வளைவு அருகே சென்றபோது திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும், பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும் செய்திகள்