< Back
மாநில செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை ஒதுக்கி உரிய ஊதியம் வழங்க வேண்டும்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை ஒதுக்கி உரிய ஊதியம் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
18 April 2023 10:41 PM IST

100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை ஒதுக்கி உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை ஒதுக்கி உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாக கூட்டரங்கில் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் சலுகைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சாய் தள வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதியுடன் உள்ள இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகளை ஒதுக்கி, உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். பணித்தள பொறுப்பாளர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளையும் நியமிக்க வேண்டும்.

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும்...

முந்தைய கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை. மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மற்றும் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையாக பதில் தெரிவிக்க வேண்டும்.

செங்கம், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு தாலுகாக்களில் இருந்து திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றோம். வெகு தொலைவில் இருந்து மாற்றுத்திறனாளிகளால் வந்து செல்ல முடியவில்லை. எனவே, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்