< Back
மாநில செய்திகள்
கோயில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதனுக்கு அல்ல - மதுரை ஐகோர்ட்டு கருத்து
மாநில செய்திகள்

கோயில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதனுக்கு அல்ல - மதுரை ஐகோர்ட்டு கருத்து

தினத்தந்தி
|
15 Jun 2022 2:56 PM IST

கோயில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதனுக்கு அல்ல என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய சேதுபதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயில் திருவிழாக்களில் யாருக்கு முதல் மரியாதை கிடையாது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று "கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல" என்று கூறிய நீதிபதி கோவிலின் யாருக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டாம் எனவும் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்