< Back
மாநில செய்திகள்
Tamil Nadu 4 places hit 100 degrees
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் சதமடித்த வெயில்

தினத்தந்தி
|
2 Jun 2024 8:47 PM IST

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்தது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பம் பதிவான இடங்கள் பின்வருமாறு;-

*ஈரோடு - 103 டிகிரி(பாரன்ஹீட்)

*கரூர் பரமத்தி - 101 டிகிரி

*மீனம்பாக்கம் - 101 டிகிரி

*வேலூர் - 101 டிகிரி

மேலும் செய்திகள்