< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முக கவசம் கட்டாயம்: மீறினால் அபராதம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முக கவசம் கட்டாயம்: மீறினால் அபராதம்

தினத்தந்தி
|
27 Jun 2022 8:15 AM IST

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதில் உருமாறிய கொரோனா தற்போது 8 வகையாக பரவி வருகிறது. குறிப்பாக பி.ஏ.5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் கானப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 1,500 ஐ நெருங்குகிறது. முக்கியமாக தமிழகத்தின் நகர் பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவேண்டிய அவசியம் நிலவுகிறது.

ஏற்கெனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில், அதனை தீவிரப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தமிழக பொது சுகாதார துறை சட்டம் 1939-ன் படி இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தாமாக முன்வந்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்