தமிழ்நாட்டில் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
|தமிழ்நாட்டில் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
32 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, மாவட்டங்களுக்கு புதிதாக காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்விவரம் பின்வருமாறு:-
* ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை, கிருஷ்ணகிரி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* மதுரை எஸ்.பி. சிவபிரசாத், தேனி எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர், சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான் அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.