< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து நேற்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த காங்கிரசார் திடீரென பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்