< Back
மாநில செய்திகள்
சிங்கம்புணரியில், சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரியில், சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

தினத்தந்தி
|
26 Sep 2022 6:45 PM GMT

சிங்கம்புணரியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. முதலாவது பிரிவில் பெரிய மாடு 19 ஜோடிகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவில் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 32 ஜோடி மாட்டு வண்டிகளும் என மொத்தம் 51 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டு வண்டிக்கு பந்தய தூரமாக சிங்கம்புணரி சிவபுரிபட்டி விலக்கில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்திற்கு சிங்கம்புணரி சிவபுரிபட்டி விலக்கில் இருந்து எஸ்.வி. மங்கலம் வரை 6 மைல் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது.

பரிசுகள்

சிவபுரிபட்டி விலக்கில் இருந்து தொடங்கிய போட்டியை சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் தாயுமானவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து தயாராக நின்ற மாட்டு வண்டிகள் தங்கள் எல்லையை நோக்கி சீறி பாய்ந்தன.

சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் நின்று சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற 12 மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்