ஈரோடு
சத்தியமங்கலம் வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டி யானை
|சத்தியமங்கலம் வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்குட்பட்ட பீக்கரிபாளையம் அருகே கக்கரா குட்டை பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி மற்றும் கால்நடை டாக்டர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து குட்டி யானையை கால்நடை டாக்டர் சதாசிவம் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது. இதுகுறித்து டாக்டர் சதாசிவம் கூறுகையில், 'இறந்து கிடந்தது 4 வயது உடைய ஆண் குட்டி யானை ஆகும். எவ்வாறு இறந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. யானையின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் எவ்வாறு இறந்தது என்பது,' தெரியவரும் என்றார்.