< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

தினத்தந்தி
|
2 Sept 2023 5:39 PM IST

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.

மேலும் செய்திகள்