< Back
மாநில செய்திகள்
முள்ளக்காடு ராஜிவ் நகரில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

முள்ளக்காடு ராஜிவ் நகரில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

முள்ளக்காடு ராஜிவ் நகரில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ் நகர் 7-வது தெருவில் புதியதாக போடப்பட்ட, மழைநீர்வடிகால் கானில் மூடி போடப்படாத நிலையில், உள்ளது. இந்த நிலையில் அந்த வடிகாலில் சினை பசு மாடு ஒன்று நேற்று அதிகாலையில் விழுந்து கிடப்பதாக தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு சுடலைமுத்து, சுதன், மைக்கிள் அந்தோணி, சின்னதம்பி, அசோக், வேலாயுதம், சதீஷ்குமார் ஆகிய வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனத்துடன் சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்