< Back
மாநில செய்திகள்
புன்னக்காயலில் ஆற்றுப்படுகைக்கு சென்ற  மூதாட்டி மாயம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

புன்னக்காயலில் ஆற்றுப்படுகைக்கு சென்ற மூதாட்டி மாயம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

புன்னக்காயலில் ஆற்றுப்படுகைக்கு சென்ற மூதாட்டி மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆறுமுகநேரி:

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் வடக்கு தெருவை சேர்ந்த ரொமான்ஸ் மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர் நேற்று முன்தினம் பகலில் புன்னக்காயல் ஒத்தப்பனை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் உமரிக் கீரை பறிப்பதற்காக சென்று உள்ளார். ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதனால் நேற்று புன்னக்காயலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நேற்று காலையில் 15 படகுகளில் 50 பேர் புன்னக்காயல் ஆற்றுப்படுகையில் தேடினர். ஆனாலும் நேற்று மாலை வரை அவரை பற்றிய தகவல் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்