< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
புஞ்சைபுளியம்பட்டியில்ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
|15 Oct 2023 6:43 AM IST
புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 67 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.76-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.60-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது.