< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சு விரட்டு போட்டியை காண சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு
மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சு விரட்டு போட்டியை காண சென்ற இளைஞர் மாடு முட்டி உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 Feb 2023 4:26 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. வார்ப்பட்டு கிராமத்தில் ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போட்டி போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது வழக்கம். அந்த வகையில் மஞ்சுவிரட்டு போட்டியானது வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று.

இந்த நிலையில் இந்த போட்டியை காணச்சென்ற புதுவயல் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரை மாடு முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்